அமைதி குறித்து இலங்கைக்கு நீண்ட அனுபவம் உள்ளது. 30 வருட கால யுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எம்முள் இன்றும் காணப்படுகிறது. அமைதியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மத கோட்பாடுகள் மற்றும் கலாசார அம்சங்களை பாதுகாக்கும் பொறுப்பு சர்வ மதத் தலைவர்களுக்கு உண்டு. அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட வியட்நாமிய பௌத்த துறவியான பஞ்ஞாகர தேரர் இலங்கையில் தம்புள்ளையில் ஆரம்பித்த ‘அமைதிக்கான நடைப்பயணம்’ செவ்வாய்க்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது.இந்த விசேட நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உலக அமைதி இன்று பேசுபொருளாகியுள்ள நிலையில் இலங்கையில் அமைதிக்கான நடைபவணி யாத்திரையை மேற்கொண்ட பஞ்ஞாகர தேரர் உட்பட தேரர்களுக்கு இலங்கை மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியையும், கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பஞ்ஞாகர தேரர் உட்பட தேரர்களை அன்புடன் வரவேற்ற இலங்கை மக்களுக்கும், அவர்களுக்கு பாதுகாப்பளித்த பாதுகாப்பு தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதி குறித்து இலங்கைக்கு நீண்ட அனுபவம் உள்ளது. 30 வருட கால யுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எம்முள் இன்றும் காணப்படுகிறது. அமைதியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
உலக அமைதி ஒட்டுமொத்த உலகுக்கும் செல்வாக்கு செலுத்தும் என்பது தற்போது வெளிப்படுத்தப்படுகிறது. யாத்திரை என்பது எமக்கு புதிதல்ல, அது பௌத்த மதம் மற்றும் இலங்கையர்களின் கலாசாரத்துடன் தொடர்புடையது.
நாட்டின் மத கோட்பாடுகள் மற்றும் கலாசார அம்சங்களை பாதுகாக்கும் பொறுப்பு சர்வ மதத் தலைவர்களுக்கு உண்டு. அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.



