தஞ்சமடைந்த காவல்துறையினரை ஒப்படைக்குமாறு மியான்மர் இந்தியாவிடம் கோரிக்கை

மியான்மரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது வரையில் ஐம்பது பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இந்த சூழல், இராணுவத்தின் கட்டளைகளை ஏற்க மறுத்த  காவல்துறையைச் சேர்ந்த சுமார் மும்பது பேர் உயிருக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

மியான்மர் எல்லையில் அமைந்துள்ள Champai  மற்றும் Serchhip  ஆகிய மிசோரம் மாநிலத்தின்  மாவட்டங்கள் வழியாக இவர்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள காவல்துறையினரை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு மியான்மர் இராணுவ அதிகாரிகள் இந்தியாவிடம்  வலியுறுத்தியுள்ளதாக மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தின் இணை ஆணையாளர் மரியா சி.டிசுவாலி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக இந்திய உள்துரற அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.