பிரித்தானியாவில் குடிசன மதிப்பீடு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

பத்து வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் குடிசன மதிப்பீட்டில் பங்கு கொண்டு தமிழ் மக்களின் இன ரீதியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை பிரித்தானியா அரசு உணர்ந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் நிறைவடையவுள்ளது. இதில் பிரித்தானியாவில் உள்ள மக்களின் விபரங்கள் எடுக்கப்படுவதுண்டு.

இந்த நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் குடிசன மதிப்பீடு தொடர்பான விண்ணப்ப படிவங்களில் தமிழ் (Tamil) என்ற சரியான சொற்களை பின்வரும் மூன்று இடங்களில் நிரப்புவதன் மூலம் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களின் சரியான தொகையை அறியமுடியும் என்பதுடன் ஊடகம், அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்த்த முடியும். இதன் மூலம் தமிழ் இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விபரங்களை கீழே நீங்கள் பார்க்கலாம்.

unnamed பிரித்தானியாவில் குடிசன மதிப்பீடு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை