முஸ்லிம் மக்களின் மத நூல்களுக்கு சிறீலங்காவில் தடை

னைத்துலக சமூகத்தின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக கொரோனா நோயினால் மரணிக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பது என சிறீலங்கா அரசு எடுத்த முடிவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதும், தற்போது முஸ்லிம் மக்களின் மத நூல்களை இறக்குமதி செய்வதற்கு சிறீலங்கா அரசு தடைகளை விதிக்கவுள்ளதாக சிறீலங்காவில் ஜனநாயகத்தினை ஏற்படுத்துவதற்கான ஊடகவியலாளர் அமைப்பு தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க் குற்றவாளி என இனங்காணப்பட்டவருமான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண கடந்த வெள்ளிக்கிழமை (5) கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் மக்கள் தமது மத நூல்ளை இறக்குமதி செய்வதற்கு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.