அமெரிக்காவில் தேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை – இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் காந்தி சிலையின் அடித்தளத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள அந்நாட்டில் உள்ள இந்திய அமெரிக்கர்கள், இந்தச் சம்பவத்தை வெறுக்கத்தக்க குற்றமாக விசாரிக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வடக்கு கலிபோர்னியாவின் டாவிஸ் நகரில் அமைந்துள்ள மத்திய பூங்காவில், வைக்கப்பட்டிருந்த 294 கிலோ எடை கொண்ட 6 அடி உயர காந்தி சிலையின் கணுக்கால் வெட்டப்பட்டு இருப்பதோடு, முகத்தின் பாதி சேதப்படுத்தப்பட்டு காணாமல் போய் இருப்பதாக  டாவிஸ் நகரில் வெளியாகும் உள்ளுர் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.