அமெரிக்க அதிபர் தேர்தல் – இன்று நேரடி வாக்குப்பதிவு

உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் இன்று தேர்தல் நடைபெறுகின்றது.

புளோரிடா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடனுக்கே அமோக ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எந்த தேதியில் வாக்குப் பதிவு நடைபெறும்? எந்த தேதியில் புதிய அதிபர் பதவியேற்பார் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அதன் படி நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்தப்படும் என்பது மாற்றம் இல்லாதது.

அமெரிக்க அரசியல் சாசனத்தின் 24 வது திருத்தத்தின்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும்.

அமெரிக்க அரசியல் அமைப்பின்படி அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. அவை குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகும்.

குடியரசு கட்சி வேட்பாளர் – டொனல்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் – ஜோ பைடன்

மேலும் அமெரிக்க அதிபராவதற்கு முதலில் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும்.  அடுத்து குறைந்தது 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்தோடு 14 ஆண்டுகளாவது அமேரிக்காவில் குடியிருக்க வேண்டும்.

இந்நிலையில், அமெரிக்காவில் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் முன் வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்தி தங்கள் வாக்கைச் செலுத்திய நிலையில் இன்று நேரடி வாக்குப்பதிவு நடக்கிறது. தபால் ஓட்டுகள் மூலமாகவும் மக்கள் தங்கள் வாக்கைச் செலுத்தியுள்ளனர் என்று புளோரிடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று மட்டும் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதிவான ஓட்டுகள் புதன்கிழமை முதல் எண்ணப்படுகிறது என்றும் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் ஜோ பைடனே முன்னிலையில் இருந்து வருகிறார்.

முக்கிய மாகாணங்களான புளோரிடா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடனுக்கே அமோக ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப்பின் தேசியவாதம் மற்றும்  கொரோனா விவகாரம் அவருக்கு இந்த தேர்தலில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது அதுவே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பிரதிப்பலித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.