டக்ளஸின் பெயர் நாடாளுமன்ற பேரவைக்கு பரிந்துரை!

20 ஆரசியல் அமைப்பின் பிரகாரம் உருவாக்கப்படும் நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினராக டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள், மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளுக்கான நியமனங்களை குறித்த நாடாளுமன்றப் பேரவையே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்.

5 உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த நாடாளுமன்றப் பேரவையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர்,    ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் அங்கம் வகிப்பார்கள்.

WhatsApp Image 2020 11 02 at 10.06.52 PM டக்ளஸின் பெயர் நாடாளுமன்ற பேரவைக்கு பரிந்துரை!

அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சாவின் தெரிவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

19 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.