கேரளா நிலச்சரிவில் 85பேர் மண்ணுக்குள் புதைந்தனர்

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 85பேர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மூணார் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களுக்கான குடியிருப்பு இல்லங்களில் தங்கியிருந்த 30 குடியிருப்புகளைச் சேர்ந்த  85 பேர் இந்த நிலச்சரிவில் சிக்குண்டு மண்ணிற்குள் புதைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை இவர்களில் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 9 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் பணியினரும், வனத்துறையினர், தீயணைப்பு மீட்புத் துறையினர், மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், அவர்களின் மருத்துவ செலவுகளை அரசாங்கமே பொறுப்பேற்கும் எனவும் கேரள முதல்வர் பிரனாய் விஜயன் தெரிவித்துள்ளார்.