கனடா ஆட்டிக் கடற்பகுதியில் இடிந்து விழுந்த பனிப்பாறை

கனடாவின் ஆட்டிக் கடற்பகுதி பனிப்பாறைகளால் நிறைந்து காணப்படும். வெப்பமயமாதலின் காரணமாக பனிப் பாறைகள் உருகி வருகின்றது. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது

புவி வெப்பமயமாதலினால் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகின்றன. கனடாவின் வடக்குப் பகுதியில் இருந்த இராட்சதப் பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 40 சதவீத பனிப்பாறைகள் உருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உருகி விழுந்த பனிப்பாறையின் அளவு சுமார் 80 சதுர கிலோமீற்றர் எனவும் நியுயோர்க்கிலுள்ள 60 சதுர கிலோ மீற்றர் அளவு கொண்ட மன்ஹாட்டன் தீவை விட பெரியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடிந்து விழுந்த பனிப்பாறை வடக்கு கனடாவிற்கு சொந்தமான மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நுனாவட் எல்லீஸ்மீர் தீவில் உள்ளது. சாதாரண காற்று வெப்பநிலைக்கு மேல், கடல் காற்று மற்றும் பனி நிறைந்த நீர் ஆகியவை பனிப்பாறையின் ஒரு பகுதியை உடைத்திருக்கலாம் என கனடாவின் பனி மையம் தெரிவித்துள்ளது.