அமெரிக்கா – அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்கா அலாஸ்காவில் செவ்வய்க் கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலிருந்து 105 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பெரிவில்லேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் அளவு கோலில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அமெரிக்கப் புவியியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் வடக்கு அமெரிக்காவில் சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அலாஸ்காவில் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7.0 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.