2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று திங்கட்கிழமை (23) அரச சேவையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலக ஊழியர்களும் இன்று அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு “வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ப கொடுப்பனவை உறுதி செய், மூன்று வேளை உணவை உறுதிப்படுத்து, சம்பளத்தை உறுத செய், இடைக்கால கொடுப்பனவுகள வழங்கு” போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.