2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை கடந்த வியாழக்கிழமை சமர்ப்பித்திருந்தார்.
2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 20ஆம் திகதி வரை தொடரவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு) நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அதேவேளை, மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



