இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 27-ம் திகதி இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 120 தொகுதிகளில் ஆட்சியமைக்க 61 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஆளும் லிகுட் கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக டுகெதர் கூட்டணிக்கு 48 இடங்கள் கிடைத்தன. இஸ்ரேலை சேர்ந்த அரபு கட்சிகளின் கூட்டணியான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்களையும் மற்றொரு அரபு கூட்டணியான ராஆம் 8 இடங்களையும் கைப்பற்றின.
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். அடுத்த 6 வாரங்களுக்குள் ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த சூழலில் காடி ஐசன்கோட் கூறியதாவது: நாம் இப்போது அவசரகால சூழலில் உள்ளோம். இதை புரிந்து கொண்டு எங்களது கூட்டணி அரசில் லிகுட் கட்சி மற்றும் ஆளும் கூட்டணி கட்சிகள் இணைய அழைப்பு விடுக்கிறேன். நாம் ஒன்றிணைந்து தேசிய எமர்ஜென்சி அரசை அமைக்கலாம். ஆனால் என்னை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைக்கப்படும்.



