கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிப்பதற்காகவும் மகா சங்கத்தினரை முன்னிலைப்படுத்திய பாதயாத்திரை ஒன்று இன்று (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.
பாதயாத்திரை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கண்டி மகுல் மடுவ பகுதியில் விசேட ஆசீர்வாத நிகழ்வும் நடத்தப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பூஜ்ய உலப்பனே சுமங்கல தேரர், தற்போதைய அரசாங்கத்தினால் தன்னிச்சையான முறையில் ஞானசார தேரருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.



