நாணய நிதியத்தின் 7ஆவது மதிப்பாய்வுக்கு உடன்பாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் ஏழாவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே ஊழியர்மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த மதிப்பாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தவுடன், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக, தொடர்ச்சியான பின்னடைவுகளுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழும் திறனை வெளிப்படுத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் மோதலின் தீவிரம் மற்றும் கால அளவு குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக பொருளாதார அபாயங்கள் இன்னும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.