பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (06) முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இவ்வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.
வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் பொதுத்தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு மாற்றீடாக நீதியமைச்சினால் ஆக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.
இவ்வாறான நிலையில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் சிவில் அமைப்பினர் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று காலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.



