யுத்தத்துக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஜி.பி.எஸ் முறைமையிலான அளவீட்டுப்படங்கள் ஊடாகவே காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது பொதுமக்களின் காணிகளும் அரச காணிகள் என்ற கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருக்கலாம். அரச காணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியாரின் காணிகள் விடுவிக்கப்படும் என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத்துறை திணைக்களம் ஆக்கிரமித்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



