ஷாங்காய் மாநாட்டில் மோடி, புதின், ஜி ஜின்பிங் பங்கேற்பு

கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்றனர்.

ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு (எஸ்​சிஓ) கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்​பெகிஸ்​தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான், பாகிஸ்​தான், தஜிகிஸ்​தான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த கூட்​டமைப்​பின் உச்சி மாநாடு கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நேற்று தொடங்​கியது. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் உட்பட உறுப்பு நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்று உள்​ளனர்.

மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான், கிர்​கிஸ்​தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்​மீனியா பிரதமர் நிகோல் பாஷின்​யான் ஆகியோரைப் பிரதமர் மோடி நேற்று தனித்​தனி​யாக சந்​தித்​து கலந்துரையாடியுள்ளார்.