எரித்திரியா நாட்டைச் சேர்ந்த சிபு 1 என்ற எண்ணெய் கப்பல் நேற்று முன்தினம் ஏமன் கடல் பகுதியில் 16 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் சிபு 1 எண்ணெய் கப்பலை கடத்திச் சென்றனர்.
இந்த கப்பல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றி பல்வேறு நாடுகளுக்கு விநியோகம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது எண்ணெய் கப்பல் நிர்வாகம் சார்பில் சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கேமரூன் நாட்டைச் சேர்ந்த லுதுப் என்ற சரக்கு கப்பல் சோமாலியாவின் புன்ட்லேண்ட் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 6 இந்தியர்கள் உட்பட 10 ஊழியர்களுடன் ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.



