காஸாவில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை முழுமையாக கைவிடவும், இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது அமைதி வாரியம் இதனை சாதித்திருப்பதாகவும், இது “காஸா ஒரு புதிய பாலத்தீன அரசாங்கத்தால் ஆளப்படுவதை நோக்கிய ஒரு முக்கியமான படி” என்றும் ட்ரம்ப் கூறினார்.
காஸாவில் முழுமையாக ஆயுதங்களைக் கைவிடுவதற்கான அமைதி வாரியத்தின் திட்டத்திற்குத் தாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இஸ்ரேல் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
நன்றி – பிபிசி தமிழ்



