இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை டெல்லி காவல்துறையினர் காவலில் எடுத்து, நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி இன்று நாங்கள் அவரது இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்றோம். இந்த விவகாரத்தில் பொறுப்பேற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவோ அரசு விரும்பவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதிவி விலக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.




