கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் இன்று (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களோடு தொடர்பு கொண்டு கேட்ட போது,
“இந்த விடயம் தொடர்பாக தான் அரசாங்கத்தின் உயர் மட்டத்தோடு தொடர்புகொண்டு பேசியதாகவும் குறித்த இடத்தில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது எனவும் தொல்பொருட்கள் சிதைவடையாமல் இருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்கள். எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அந்த இடத்தில் எந்தச் சமய கட்டடங்களும் கட்டாதிருப்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என கோரி நீதி மன்றத்தில் சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய ஒழுங்குகள் மேற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.



