கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 112,000ஆல் குறைவடைந்துள்ளது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஆபத்தான, பாதுகாப்பற்ற குழந்தை பிறப்பு வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருமணமாகாத பாடசாலை மாணவிகள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பிரத்தியேக வேலைத்திட்டம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



