காசா மக்களைக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட “தங்குமிடங்களுக்கு” மாற்றும் திட்டம் சில வாரங்களுக்குள் தொடங்கும் என்றும், அதற்கான அடித்தளம் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டது என்றும் ஒரு இஸ்ரேலியப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை அங்கீகரித்து செய்தி வெளியிட்ட, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஆதரவு ஊடகமான இஸ்ரேல் ஹயோமின் படி, ரஃபா அருகே உள்ள டெல் அல்-சுல்தானில் தொடங்கி, பொதுமக்கள் வேலியிடப்பட்ட “மனிதாபிமான முகாம்களுக்கு” அனுப்பப்படுவார்கள். டிட்ரம்ப் நிர்வாகத்தின் “அமைதி வாரியத்தின்” கீழ் உள்ள ஒரு பன்னாட்டுப் படை, புதிதாகக் கட்டப்பட்ட தளத்திலிருந்து அந்தப் பகுதிகளைக் கண்காணிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் மஞ்சள் கோட்டிற்கு அப்பால் “தனது பிடியைத் தொடர்ந்து பராமரித்து ஆழப்படுத்தும்”.
ஹமாஸை “மக்கள், நிலப்பரப்பு அல்லது வளங்கள் இல்லாமல்” ஆக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு “இடுக்கி நகர்வு” என்று அந்தப் பத்திரிகை இதை வெளிப் படையாக விவரிக்கிறது. அந்தப் பகுதிகளுக்கு வாகன அணிவகுப்புகளும் உதவிகளும் கிடைக்கும், ஆனால் மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான கான்கிரீட் கிடைக்காது. இராணுவம் “சர்வதேச விமர்சனத்தின் வரம்பிற்குக் கீழே இருக்கும் அதே வேளையில், இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளின் வேகத்தைத் தொடரும்” என்று ஒரு இஸ்ரேலிய அரசியல் வட்டாரம் அந்தப் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளது.
இந்தக் குவிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது: அமைதி வாரியம் ஜூன் 30 அன்று ஒரு தளவாடத் தளத்திற்கு தந்திரோபாய வாகனங்கள் வந்தடையும் படங்களை வெளியிட்டது, மேலும், உதவி என்பது பரி சோதனையின் அடிப்படையில் நிபந்தனைக்குட்பட்ட, கண்காணிக்கப்படும், சோதனைச் சாவடிகளால் கட்டுப் படுத்தப்படும் ஒரு சமூகத்தை விவரிக்கும் கசிந்த ஆவ ணங்களுடன் இந்தத் திட்டம் பொருந்துவதாக டிராப் சைட் கூறுகிறது.



