நிதியியல் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால், வற் (VAT) என்ற பெறுமதி சேர் வரி தொடர்பான திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.
இதன்படி, டிஜிட்டல் சேவைகள் மற்றும் மின்னணு தளங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்கும் வரி விதிக்கப்படவுள்ளது.
வரி வலையமைப்பை டிஜிட்டல் சேவைகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 10ஆவது பிரிவின் கீழ், ஒருவரின் மொத்த வரிக்குரிய பொருட்கள் மற்றும் சேவைகளின் பெறுமதி 90 இலட்சம் ரூபாவை தாண்டும்போது, அவர்கள் பெறுமதி சேர் வரிக்காகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிதிச் சேவைகள் மீதான வரி வீதம் 18 சதவீதத்திலிருந்து 20.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கும் வரி அமுல்படுத்தப்படவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தில் சிறந்த இணக்கப்பாட்டை உறுதி செய்யும் வகையில், டிஜிட்டல் சேவைகள் தொடர்பான வரிகளைப் பதிவு செய்வதற்கும் செலுத்துவதற்கும் புதிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



