தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் : வாக்கு எண்ணும் பணி இன்று….

தேர்தல் நடைபெற்றது:23/04/2026, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகள் உடனே எண்ணப்படாமல் சில வாரங்கள் கழித்து எண்ணப்படுவதற்கான முக்கிய காரணங்கள், தேர்தல் ஆணையத்தின் நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பதால் அவர்களால் தீர்மானித்தே 10, நாட்களுக்கு பின்னர் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்து எண்ணப்படுவதற்கான காரணம்.

மொத்த வாக்குகள்: 5,67,07,380.
•ஆண்கள்: 2,77,38,925
•பெண்கள்: 2,89,60,838
•மூன்றாம் பாலினத்தவர்: 7,617
•18-19 வயதுடைய வாக்காளர்கள்: 12.51 லட்சம்
•மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4.63 லட்சம்
•மூத்த குடிமக்கள் (85 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 3.99 லட்சம்

வாக்கு சாவடிகள்: 75,032.
வாக்களிக்கப்பட வீதம்: 85.15%

இன்று (04/05/2026)காலை 08, மணிக்கு 234, தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணும் பணி 62, நிலையங்களில் நடைபெறவுள்ளன.
62, நிலையங்களிலும் எண்ணப்படும் வாக்குகள் தேர்தல் ஆணையகத்துக்கு உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு அங்கிருந்தே ஒவ்வொரு தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.
இறுதி முடிவுகள் இன்று பி.ப.05, மணிக்கு எந்தக்கட்சு ஆட் சியில் அமரும் யார் முதலமைச்சர் என்பது தெரியவரும்.

தேர்தல் நடைபெற்றது: 23/04/2026.
மொத்த தொகுதிகள்:234,
போட்டியிட்ட வேட்பாளர்கள்: 4,023.
ஏறக்ககுறைய 40, கட்சிகள் கூட்டாகவும், தனித்தும் போட்டியிட்டனர்.

ஆண் வேட்பாளர்கள்: 3,580 (89.0%)
பெண் வேட்பாளர்கள்: 442 (11.0%)
மூன்றாம் பாலினத்தர்:01

வெற்றியீட்டும் உறுப்பினர்கள்:234, (இதில் முதலமைச்சராக ஒருவர் தெரிவாவார்)
தோல்வியடையும் வேட்பாளர்கள்:3779,

ஒரு தொகுதியில் இரண்டு வேட்பாளர்கள் சமமாக வாக்குகளை பெற்றால் குலுக்கல் முறையில்(திருவுளச்சீட்டு) மூலம் யார் வெற்றிபெற்றவர் என்பதை அறிவிப்பார்கள்.

தமிழ்நாட்டில் மதத்துக்கு அப்பால் சாதி(குலம்)
சார்ந்த பெயரைக்கொண்ட அரசியல் கட்சிகளும் உண்டு.

உதாரணம்:
1, முக்குலத்தோர் புலிப்படை.
2, வேளாளர் முன்னேற்றக்கழகம்.
(இதைவிட வேறு வேறு சாதியினரை மையப்படுத்து வெவ்வேறு பெயர்களில் சிலகட்சிகளும் உண்டு)

தற்போதைய ஆளும் கட் சியான திராவிடர் முன்னேற்ற கழகம்(திமுக)பிரதான எதிர்க்கட் சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அதிமுக)சீமானின் நாம் தமிழர் கட்சி(நாதக) மற்றும் முதல் தடைவையாகத் தேர்தலைச் சந்திககும் நடிகர் விஜய் யின் தமிழர் வெற்றிக்கழகம் (தவெக) என நான்கு முனைப் போட்டி நிலவியது.

1. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட் ட ணியில் திமுக 164, காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, மார்க் சிஸ்ட் 5, இந்திய கம்யூனிஸ்ட் 5, மதி முக 4, ஐயூஎம் எல் 2, கொமதேக 2, மமக 2, மஜக, முக்குலத்தோர் புலிப் படை, எஸ் டிபிஐ, தமிழர் தேசம் கட்சி தலா ஒரு தொகு தி யில் களம் கண்டன.

2. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் ட ணி யில் அதிமுக 166, பாஜக 26, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட் சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ், தென் னிந்தியபார்வர்ட் பிளாக், தமமுக தலா ஒரு தொகு தி யில் போட் டி யிட்டன. சசிகலா ராமதாஸ் கூட்டணியில் அகில இந்திய புரட்சித் தலை வர்மக்கள் முன் னேற்றக்கழகம் (சசிகலா) 71, அய்யா பாட் டாளி மக்கள் கட்சி (ராம தாஸ்) 38, பசும் பொன் மக்கள்தேசம் 02, வேளாளர் முன்னேற்றக்கழகம் 01, இதரக்கட்சிகள் 08 ,இடங்களில் போட்டியிட்டன.

3. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதி களிலும் தனித்து களம் கண்டுள்ளது.

4. முதல் முறையாக தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தவெக 233 தொகுதிகளில் தனித் துப் போட்டியிட்டுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் ஒரு சுயேச்சை வேட் பாளருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது.

5. தமிழக வாழ்வுரிமை கட்சி (வேல் முரு கன்) 170 தொகுதிகள், புதிய தமிழகம் (கிருஷ்ண சாமி) 70 தொகுதிகள், பகுஜன் சமாஜ் கட்சி 118 இடங்களில் போட்டியிட் டன.

தமிழ் நாட்டு தேர்தல் களம் இம்முறை என்றும் இல்லாதவகையில் பலத்த போட்டிகள், பலத்த பிரசாரங்கள், களத்தில் நேரடியாகவும், சமூகவலைத்தளங்களிலும் ஏட்டிக்கு போட்டியாக நடைபெற்றுள்ளது.

கருத்து கணிப்புகளும் என்றும் இல்லாதவாறு தமக்கு சார்பானவர்களை முதன்மைபடுத்தியும், பக்கசார்பற்றதாகவும் யார் முதலைச்சர், எத்தனை ஆசனங்கள், எத்தனை வீதம் வாக்குகள் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னர் வாக்கெண்ணும் இன்று (04/05/2026) இறுதிநேரம் வரையும் இடம்பெற்று சமூக ஊடகங்களை நிரப்பியுள்ளன.

தேர்தல் முடிவு உத்தியோக பூர்வ முடிவு வெளியானபின்னர்..

ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பம், வன்முறை, மோதல் இடம்பெறலாம்.
தற்கொலைகளும், தீக்குளிக்கவும் சிலர் முயற்சிப்பர்.
இளைஞர்கள் மத்தியில் சில வேண்டத்தகாத சம்பவங்களும் இடம்பெறவாய்புள்ளது.
ஆர்ப்பாட்டம். பேரணிகள் பட்டாசு வெடிகள் என்பனவற்றாலும் சச்சரவுகள் தோன்றும்.
ஆதரவாளர்களின் வீடுகளை இலக்குவைத்தும் தாக்குதல் இடம்பெறலாம்.

இவைகளெல்லாம் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் இம்முறையும் இடம்பெறவாய்புகள் உண்டு.

எனவே இதனை தடுக்க காவல் துறையினருக்கு அதிக பணிகள் உண்டு.
அதேவேளையில் தமது கட்சி தொண்டர்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய பொறுப்பு சகல கட்சி தலைமைக்கும், வேட்பாளர்களுக்கும், வெற்றி பெறும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உண்டு..!

இன்று மாலை முடிவுகளையும், முடிவுகளுக்குபின்னர் ஏற்படும் பிரதிபலிப்புக்களையும், அதன்பின்னர் சுமார் ஒருவாரங்களாக வரும் விமர்சனங்களையும் பார்ப்போம்.

ஈழத்தமிழர்களை பொறுத்தவரை யார் வெற்றிபெற்றாலும், யாருடைய கட்சி ஆட்சியமைத்தாலும் எந்த அதிசயமும் நடக்கப்போவதில்லை அறிக்கைகள் மட்டும் வரும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளவது நல்லது. எனவே குறிப்பாக ஈழத்தில் உள்ள இளைஞர்கள் மிக கவனமாக செயல்படவேண்டும்.

தேர்தல் காலத்தில் தமக்கு பிடித்தவர்களை ஆதரித்து சில செயல்பாடுகளை செய்தாலும் தேர்தல் முடிவுகளில் தாம் எதிர்பார்த்வர். எதிர்பார்த்த கட்சி ஆசனங்களை பெறாவிட்டால் அதற்காக மனமுடைந்து முரண்படுவதோ, வீண் சண்டைகள் செய்வதையோ தவிர்த்து மௌனமாக நடப்பதை அவதானிப்பதே எமக்கு நல்லது.!

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சர்வசாதாரணம்…!

-பா.அரியநேத்திரன்.