ஈரானின் இஸ்பஹானைச் சேர்ந்த 21 வயதான சசன் ஆசாத்வர் ஜோங்கானி தூக்கிலிடப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட அவர், இஸ்பஹானின் தஸ்த்கார்ட் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
அவரது குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம், மனித உரிமைகள் இணையதளமான HRANA-விடம், அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மதியம் ஒரு ‘பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில்’ நடைபெற்றதாகவும், அதில் “அவரது 10 உறவினர்கள் மட்டுமே” கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியது.
ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நீதித்துறை, அரசாங்கத்தை “கவிழ்க்கும்” நோக்கில் ஜனவரி மாதம் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது, சசன் ஆசாத்வர் ஜோங்கானி “அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஒரு மினிபஸ் மீது கற்கள் மற்றும் குச்சிகளால் தாக்குதல் நடத்தி, வாகனத்தின் ஜன்னல்களை உடைத்து, அதிகாரிகள் மீது கற்களையும் செங்கற்களையும் வீசினார்” என்று குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



