“ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை. ஈரானின் கருத்துகள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சனிக்கிழமை (ஏப்ரல் 25) பாகிஸ்தான் செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், ‘தானும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் வெள்ளிக்கிழமை மாலை இஸ்லாமாபாத் சென்றடைந்ததாகவும், அராக்சி பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திப்பார்’ என்றும் கூறினார்.
அதே நேரம்”ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை. ஈரானின் கருத்துகள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



