இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.



