இஸ்ரேல் உடனான கூட்டமைப்பு ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் 48 மணி நேரத்துக்குள் முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் பேரணியில் உரையாற்றிய பெட்ரோ சான்செஸ், “இஸ்ரேல் உடனான தனது கூட்டமைப்பை இந்த செவ்வாய்க் கிழமைக்குள் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவை ஸ்பெயின் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கும்.
ஸ்பெயின், இஸ்ரேலின் நண்பன்தான். ஆனால், அந்த நாடு தனது நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. எனவே, ஸ்பெயின் முன்னெடுக்கும் இந்த கோரிக்கையில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.



