அமெரிக்கா தனக்கு போர்நிறுத்தம் வேண்டுமா அல்லது போர் வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில் இரண்டும் ஒன்றாக நடக்க முடியாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்தின் நிபந்தனைகள் தெளிவாக இருக்கின்றன. போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேலின் நீடித்த போருக்கு இடையே ஒன்றை அமெரிக்கா தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இரண்டும் ஒன்றாக நடக்க முடியாது.” என்றார்.
மேலும் அந்தப் பதிவில், “லெபனானில் நடைபெற்று வரும் படுகொலையை உலகமே பார்த்து வருகிறது. தற்போது முடிவு அமெரிக்காவின் கைகளில் தான் இருக்கிறது. அமெரிக்கா அதன் உத்தரவாதங்களின்படி நடக்கிறதா அல்லது இல்லையா என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.



