அர்ஜென்டினாவில் கிட்டத்தட்ட பாதி மக் கள் தொகையினர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யசேமிப்புகளைப் பயன்படுத்துவதாகவும், உடைமைகளை விற்பதாகவும் அல்லது வங்கிகள் உறவினர்
களிடமிருந்து கடன் வாங்குவதாகவும் கூறுகிறார்கள் என்று சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்ட அர் ஜென்டினா கிராண்டேவின் அறிக்கை தெரி விக்கிறது.
அர்ஜென்டினாவில் 63 சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான நடவடிக்கைகள் அல்லது சேவைகளைக் குறைத்துள்ளனர் என்பதை ஃபண்டேஷன் பென்சரின் மற்றொரு அறிக்கை, கண்டறிந்துள்ளது.
“அல்ஜசீராவின் தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிக்கிறது. ஒன்று அல்லது அதற்கு மே ற்பட்ட வேலைகளைக் கொண்டவர்கள் கூட வீடு, கார் வாங்குவதற்கு அல்ல, மாறாக உணவு வாங்குவதற்கு கடன் பெறுகிறார்கள் என்பதைக் காண்பது மிகவும் கவலை அளிக்கிறது” என்று அர்ஜென்டினா கிராண்டே நிறுவனத்தின் சமூகவியலாளரும் ஆராய்ச்சியாளருமான வயலெட்டா கரேரா பெரேரா, அறிக்கையின் ஆசிரியர் களில் ஒருவர் அல்ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
2023 டிசம்பரில் பதவியேற்ற அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே, பொதுச் செலவினங்களில் கடுமையான குறைப்புகளின் மூலம் அமெரிக்க நாணய இருப்புக்களை உருவாக்குவதன் மூலம் நிதி சமநிலையை அடைவதை அடிப்படையாகக் கொண்ட தனது சிக்கன பொருளாதாரத் திட்டம் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளதாகவும், மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாகவும் கூறுகிறார். சர்வ தேச நாணய நிதியத்தின் ஆதரவு அவருக்கு உண்டு, அர்ஜென்டினாவின் வெளிநாட்டுக் கடன்களின் அதிகமாக இருந்தபோதிலும், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சியை அது கணித் துள்ளது.
அர்ஜென்டினாவில் பொருளாதார நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக அதிகரித்திருந்தாலும், வளர்ச்சி சீரற்ற தாகவே உள்ளது. வங்கி மற்றும் விவசாயம் போன்ற துறைகள் வளர்ச்சியைக் கண்டன, ஆனால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் கூர்மையான சரிவைச் சந்தித்தன. தேவை குறைந்து வருவதால் பல தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டன. குறிப்பாக உணவு நுகர்வு குறைந்து வருகிறது, சுயாதீன உணவு சில்லறை விற்பனையாளர்கள் 12.5 சதவீத சரிவை அறிவித்துள்ளனர். பணவீக்கம் அதிகமாக உள்ளது.



