
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்றுள்ள, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள், இன்றைய தினம் (18) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.
இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரான ‘ஏக்கியராஜ்ய’ அரசியலமைப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்திய அரசினூடாக அழுத்தங்களை வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்படி, ‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும் மற்றும் ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



