இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான இளைஞன் விடுவிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
எனினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் பல மனித உரிமைகள் அமைப்புகளும் இந்த விடயம் தொடர்பில் கரிசனை வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை அத்தனகல்ல நீதிமன்றில் இன்று (07) முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் மாதாந்தம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.