முப்படையினர் ஊழலுக்கு துணை போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் ஆயிரத்து 700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

‘தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் பாதாள உலகக் குழுவின் குற்றச் செயலுக்கு துணைப்போயுள்ளனர்’.
‘ஆகையால் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், பாதாள உலகக்குழுவின் குற்றச் செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அவ்வாறே போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாதாள உலகக்குழுக்களை இந்நாட்டில் ஸ்தாபிப்பதற்கு பல அரசியல் தலைமைகள் முயற்சித்துள்ளன.
இது யாரும் அறியாத இரகசியம் அல்ல.

‘நாட்டில் அத்தகையோரை நிலைநிறுத்தி குற்றச்செயல்களின் மூலம் வெகுகாலமாக ஆட்சியை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர்’ என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.