பாகிஸ்தான் அமைச்சர் கடத்தல்!

பாகிஸ்தானின் கைபர் பக்​துன்வா மாகாணத்தில் இம்​ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ–இன்​சாப் (பிடிஐ) கட்சி ஆட்சி நடத்தி வரு​கிறது. அங்கு பொது சுகாதாரத் துறை அமைச்​ச​ராக பசல் ஷாகுர் கான் பதவி வகித்து வரு​கிறார்.

கடந்த திங்​கள்​கிழமை தலைநகர் பெஷாவரின் பிர​தான சாலையில் அவர் காரில் சென்று கொண்​டிருந்​தபோது  முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்​திய நபர்​கள்  அமைச்​சர் பசல் ஷாகுர் கானை   கடத்​திச் சென்​றுள்ளனர்.

பிடிஐ கட்சி வட்​டாரங்​கள் கூறும்போது,“அமைச்​சர் பசல் கடத்​தப்​பட்​டது குறித்து  காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளோம். ஆனால் புகாரின் மீது இது​வரை எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, பாகிஸ்​தான் இராணுவ தரப்பே அமைச்​சர் ஷாகுரை கடத்​தி​யிருப்​ப​தாக சந்​தேகிக்​கிறோம்.

சிறை​யில் இருந்து இம்​ரான் கானை விடுவிக்​கக் கோரி செப்டம்பர் 27-ம் திகதி இஸ்​லா​மா​பாத்​தில் மிகப்​பெரிய பேரணியை நடத்த திட்​ட​மிட்டு உள்​ளோம். இதை தடுக்​கவே எங்கள் மீது தொடர் தாக்​குதல்​கள் நடத்​தப்​படு​கின்றன” என்று ​ தெரிவித்துள்ளன.