ட்ராகனும் யானையும் இணை ந்து நடனமாடுவது போல சீனாவும் இந்தியாவும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதுடன் இரு நாடுகளும் தமது உறவுகளை பலப்படுத்த வேண்டிய காலமிது என சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த செவ்வாய்க்கிழமை(1) தெரிவித்துள் ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுக ளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன் னிட்டு இரு நாட்டு தலைவர்களும் தமது நல்வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டபோதே சீன பிரதமர் இவ் வாறு தெரிவித்துள் ளார்.
இரு நாடுகளும் மிகவும் பழமையான பொதுவாழ்வியலைக் கொண் டவை, தென் மண்டல நாடுகளில் இந்த இரு நாடுகளும் முக்கியமானவை. மிக வேக மாக வளர்ந்துவரும் நாடுகள். இரு நாடுகளும் அவர்க ளின் அடிப்படை நியதிகளை மதிக்கின்றன. இரு நாடுகளின் உறவுகளின் வளர்ச்சி என்பது இரு நாடுகளும் சரியான பாதையை தெரிவு செய்துள்ளன என் பதைக் காட்டுகின்றன என சீன அதிபர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இரு நாடுகளின் உறவுகள் உறுதியாகவும், நட்புறவாகவும் இருக்கின்றன. அது உலக சனத்தொகையில் மூன்றில் ஒன்றை கொண்டுள்ள இரு நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது என இந்திய அரச தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரச்சினைக்குரிய எல்லைப் பகுதிக்கான தீர்வை தாம் எட்டியுள்ளதாக இரு நாடுகளும் அறிவித் திருந்தன.



