இலங்கையில் உள்ள ரோகிங்யா அகதிகள் இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலில் இருந்து மீட்கப்பட்டோம் ஆனால் தரையில் உயிரிழக்க விடப்பட்டுள்ளோம் என தெரிவிக்கும் பதாகைள் உட்பட தங்கள் துயரங்களை தெரிவிக்கும் பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.



