இலங்கைக்கான கடனை அங்கீகரிப்பதற்காக கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மீளாய்வு தொடர்பில் பரிசீலிப்பதற்காகஇ சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் எதிர்வரும் கூட்டங்கள் தொடர்பான நேர பட்டியலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பணியாளர்கள் மட்ட இணக்கப்பாட்டை எட்டியது.
இதன்படிஇ சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை மூன்றாவது மீளாய்வை பரிசீலித்து அங்கீகரிக்குமாயின் நான்காவது தவணையாக மேலும் 333 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கப் பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளைஇ ‘இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானிக்கும்’ என்று அதன் பேச்சாளர் ஜூலி கோசாக் அண்மையில் இடம்பெற்ற செய்தி கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில்இ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்றைய தினம் (17) 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். இவ்வாறான பின்னணயில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைஇ இலங்கை தொடர்பான அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பில் பரிசீலிப்பதற்காக அடுத்த வாரம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.