‘செம்மணி பகுதி, சுமார் 600 தமிழ் பொதுமக்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியிலுள்ள இந்து மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக வெட்டப்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘படுகொலைகளுடன் தொடர்புடைய 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் இரண்டு இடங்களில் மாத்திரமே அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன’.
‘ஏனைய இடங்களில் கணிசமான அளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
‘எனவே இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற வேண்டும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



