75 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாடும் ஐரோப்பிய சமூகம்

இரண்டாவது உலகப் போரில் ஐரோப்பா வெற்றி பெற்ற நாள் இன்றாகும். 1945 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் ஜேர்மனி நிபந்தனைகள் இன்றி சரணடைந்த நாளாகும்.

இன்று குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றன. பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் விதிகள் நடைமுறையில் இருந்தாலும், மக்கள் தமது இல்லங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

சிலர் 1945 ஆம் ஆண்டு அணிந்த ஆடைகள் போன்ற ஆடைகளை அணிந்து, பல வர்ணக் கொடிகளை தமது வீடுகளின் முன் பறக்க விட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் வழமையாக திங்கட்கிழமையில் விடப்படும் மே நாள் விடுமுறை இந்த வருடம் வெற்றி நாளை கொண்டாடுவதற்காக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.