725 Views
சட்டவிரோதமாக கடல் வழிப் பயணம் மூலம் வெளி நாடுகளுக்கு குடியேற முயன்ற நான்கு வயது குழந்தை உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு திருகோணமலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த சமயம் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவின் இரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று பெண்கள் அடங்கிய இந்த குழு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.