மலேசியாவின் கிளாங் பகுதியில் உள்ள பாமாயில் தோட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 32 ஆண்கள், 18 குழந்தைகள் உள்பட 29 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்திருக்கிறார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
“இந்த குடியிருப்புகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம், தண்ணீர் இணைப்பு இருந்ததும் கழிவு நீர் ஆற்றுக்குள் விடப்பட்டும் வந்திருக்கிறது. இந்த குடியிருப்பின் சூழ்நிலை மிகவும் மோசமானதாகவும் வாழத் தகுதியற்றதாகவும் இருந்தது,” எனக் குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் கூறியிருக்கிறார்.
இந்த தேடுதல் வேட்டையின் போது சட்டவிரோதமாக இருந்த 30 வெளிநாட்டினர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.