கங்கை நதியில் மரப் பெட்டியில் வைத்து தனித்து விடப்பட்ட குழந்தை மீட்பு

கங்கை நதியில் பெட்டியில் மிதந்து வந்த  குழந்தையை மீட்டதற்காக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த படகோட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சிவப்பு நிற துண்டால் சுற்றப்பட்ட அந்த குழந்தை இந்து தெய்வங்களின் படங்கள் கொண்ட பெட்டியில் வைக்கப்பட்டு ஆற்றில் மிதந்துள்ளது.

குழந்தையின் அழுகையை கேட்ட குல்லு சவுத்ரி என்னும் அந்த படகோட்டி பெட்டியிலிருந்த குழந்தையை மீட்டுள்ளார்.

Newborn Girl In Wooden Box Found Floating In Ganga, Rescued By Boatman

குழந்தை தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் காப்பகத்தில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனக்கூறப்படுகின்றது. குழந்தையுடன் அது பிறந்த திகதி மற்றும் நேரம் குறிப்பிட்ட அட்டை ஒன்றும் இருந்துள்ளது. மேலும் அந்த குழந்தையின் பெயர் கங்கா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,குழந்தையை வளர்ப்பதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குழந்தையை காப்பாற்றிய படகோட்டிக்கு அரசு வீடு வழங்குவதாகவும்  தெரிவித்துள்ளது.