339 மில்லியன் மக்களை காப்பாற்ற 51 பில்லியன் டொலர்கள் தேவை – ஐ.நா

உலக நாடுகளில் உள்ள 339 மில்லியன் மக்கள் உதவிகளை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர்களுக்கு உதவ எதிர்வரும் வருடம் 51.5 பில்லியன் டொலர்கள் தேவை எனவும் ஐக்சிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வருடம் புதிதாக 65 மில்லியன் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றது. அது ஏற்கனேவே 68 நாடுகளை சேர்ந்த உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையை 339 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்த தொகையானது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை அல்லது உலக மக்கள் தொகையின் 4 விகிதத்திற்கு இணையானது. எனவே எதிர்வரும் வருடம் அதிக மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவேண்டிய வருடமாக அமையும் என ஐ.நாவின் அவசர உதவித் திட்டத்திற்கான இணைப்பாளர் மார்டின் கிறிபித் கடந்த வியாழக்கிழமை (1) தெரிவித்துள்ளார்.

53 நாடுகளை சேர்ந்த 222 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர். அதில் 45 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளனர்.