மட்டு. ஏறாவூரில் அரச காணியில் மக்களை குடியேற விடாமல் தடுத்து நிறுதிய அதிகாரிகள்

151 Views

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரச காணியில், நீண்ட காலமாகவே யுத்தப்பாதிப்புளால் நிர்க்கதியாக உள்ள மக்கள் குடியேற முயற்சித்தபோது மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

செல்வந்தர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்கும் போது யுத்ததினால் பாதிக்கப்பட்டு இருக்க இடமின்றி பெருமளவான தமிழ் மக்கள் வாழ்ந்துவருவதாக மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று பிரதேசசபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் தெரிவித்தார்.

IMG 0149 மட்டு. ஏறாவூரில் அரச காணியில் மக்களை குடியேற விடாமல் தடுத்து நிறுதிய அதிகாரிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலம்பாவெளியில் காணியற்ற மக்கள் அருகில் உள்ள சவுக்கடி பகுதியில் அரச காணியில் குடியேற முற்பட்டபோது குறித்த நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

நேற்று மாலை குறித்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஏறாவூர் பற்று பிரதேசசபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் அப்பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

IMG 0159 1 மட்டு. ஏறாவூரில் அரச காணியில் மக்களை குடியேற விடாமல் தடுத்து நிறுதிய அதிகாரிகள்

இதன்போது குறித்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியற்ற நிலையில் உள்ளதாகவும் நீண்டகாலமாக தாங்கள் தங்களுக்கு காணி வழங்குமாறு கோரிய நிலையில் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

IMG 0106 மட்டு. ஏறாவூரில் அரச காணியில் மக்களை குடியேற விடாமல் தடுத்து நிறுதிய அதிகாரிகள்

இது தொடர்பில் அரசியல்வாதிகள், இராஜாங்க அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுசென்ற நிலையில் தீர்வு கிடைக்கவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அரச காணியை தூய்மைப்படுத்தி குறித்த பகுதிகளை சேர்ந்த காணிகள் அற்றவர்கள் குடியேற முனைந்தபோது பிரதே செயலகத்தினால் தங்களை அப்பகுதியிலிருந்து செல்லுமாறு பொலிஸாரைக்கொண்டு விரட்டியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

IMG 0106 1 மட்டு. ஏறாவூரில் அரச காணியில் மக்களை குடியேற விடாமல் தடுத்து நிறுதிய அதிகாரிகள்

குறித்த பகுதி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணிகளற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்காமல் செல்வந்தர்களுக்கு இப்பகுதிகளில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதாக ஏறாவூர் பற்று பிரதேசசபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply