எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்


எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டின் கீழ், கடனுதவியை விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடனை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையில் நாட்டின் எரிசக்தி அமைச்சு மற்றும் இந்திய எரிசக்தி அமைச்சின் செயலாளர்கள் கைச்சாத்திடவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை இன்னும் 5 வருடங்களின் பின்னர் கடனை செலுத்துவதற்கு இந்தியாவினால் சலுகைக் காலம் வழங்கப்பட வேண்டும் என இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வௌிவிவகார கொள்கையை புதுப்பிப்பதற்கான தருணம் உதயமாகியுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்