அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 5 ஆயிரம் கொடுப்பனவு: அமைச்சர் பஸில் அறிவிப்பு

87 Views

5 ஆயிரம் கொடுப்பனவு

அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5 ஆயிரம் கொடுப்பனவு மேலதிகமாக வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபகச அறிவித்துள்ளார்.

சமுர்த்திப் பயனாளர்களுக்கு இந்த மாதம் முதல் ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங் கப்படவுள்ளது என்றும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்களுக்கான சகல வரிகளும் நீக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார். அத்துடன், பெருந்தோட்டத் துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபா என்ற அடிப்படையில் 40 ரூபா நிவாரணத்துடன் 15 கிலோகிராம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 20 பேர்ச்சர்ஸ்க்கும் குறை வான விவசாய நிலங்களைக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப் பனவு வழங்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என் பவற்றுடன் கலந்துரையாடப்படுகின்றது என்றும் நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட் டுள்ளார்.

Tamil News

Leave a Reply