யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மலேரியா நோயாளி கண்டறிவு

மூன்றாவது மலேரியா நோயாளி

யாழ்.போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் நேற்று திங்கட்கிழமை இனங்காணப்பட்டுள்ளார். இவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மூளை மலேரியாவை ஏற்படுத்தும் கிருமித் தொற்று இனங் காணப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்த நபர் தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தவர். கடந்த ஒரு மாதத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் இனங் காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளி இவராவார்.

எனவே யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மலேரியா நோய் நுளம்பின் மூலம் பரவலைத் தடுக்க நுளம்பு பெருகும் இடங்களை இல்லாது ஒழித்தல் மிகவும் அவசியமான கடமையாகும் என்றார்.

Tamil News