பாராளுமன்றத்தை உடன் கூட்டுங்கள் என்று அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாராளுமன்றத்தை மூடாமல் கூட்டத் தொடரை நடத்துவதே அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.